சமையல்
அவகேடோ டோஸ்ட்

எலும்பின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அவகேடோ டோஸ்ட்

Published On 2022-01-31 05:35 GMT   |   Update On 2022-01-31 05:35 GMT
அவகேடோவை தினமும் உட்கொள்ளும் நபர்களில், உடல் எடை, இடுப்பு சுற்றளவு, BMI எனும் உடல் எடை குறியீட்டு எண் போன்றவை குறைவான அளவில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன
தேவையான பொருட்கள் :

கோதுமை பிரெட் - 2,
பழுத்த அவகேடோ - ஒன்று,
வெங்காயத்தாள் - ஒன்று  
பச்சை மிளகாய் - ஒன்று,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தாளை வெங்காயத்துடன் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அவகேடோ, வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.

பிரெட்டின் மீது வெண்ணெய் தடவவும்.

தோசைக்கல்லை காயவைத்து, பிரெட் ஸ்லைஸ்களை டோஸ்ட் செய்து எடுக்கவும்.

டோஸ்ட் செய்த பிரெட்டின் மீது மசித்த கலவையைத் தடவிப் பரிமாறவும்.

சூப்பரான அவகேடோ டோஸ்ட் ரெடி.
Tags:    

Similar News