செய்திகள்
தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முக ஸ்டாலின்

தேவர் ஜெயந்தி- மதுரையில் தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

Published On 2020-10-30 04:32 GMT   |   Update On 2020-10-30 04:32 GMT
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரை:

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது பிறந்த நாளான இன்று தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி மதுரை கோரிப்பாளைத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்பின்னர் தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News