வழிபாடு
சீனிவாசமங்காபுரம் கோவிலுக்கு தங்க லட்சுமி ஆரம் சமர்ப்பணம்

சீனிவாசமங்காபுரம் கோவிலுக்கு தங்க லட்சுமி ஆரம் சமர்ப்பணம்

Published On 2022-02-25 06:11 GMT   |   Update On 2022-02-25 06:11 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்க லட்சுமி ஆரம் திருமலையில் இருந்து சீனிவாசமங்காபுரம் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் நேற்று இரவு கருடசேவை நடந்தது. அதில் எழுந்தருளிய உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு அணிவித்து அலங்காரம் செய்வதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்க லட்சுமி ஆரம் திருமலையில் இருந்து சீனிவாசமங்காபுரம் கோவிலுக்கு நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தங்க லட்சுமி ஆரத்தை தலையில் சுமந்தபடி கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலுக்கு ஊர்வலமாகக் கொண்டு சென்று கோவில் அர்ச்சகரிடம் சமர்ப்பித்தாா். கோவிலுக்கு வந்த அதிகாரிகளை கோவில் துணை அதிகாரி, அர்ச்சகர்கள் வரவேற்றனர். அந்தத் தங்க லட்சுமி ஆரம் கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு அணிவித்து, அலங்காரம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News