ஆன்மிகம்
கால பைரவர்

பைரவர்களில் கால பைரவர் ஏன் சிறந்தவர்?

Published On 2020-09-26 08:53 GMT   |   Update On 2020-09-26 08:53 GMT
கால பைரவர் சில சிவன் கோவில்களில் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருவார், கால பைரவர் காலத்தை கட்டுப்படுத்தும் பைரவர் ஆவார்.
காசி நகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு பூஜைகள் முடிந்த பிறகு தான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும். காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வழிபட்டு இறுதியாக கால பைரவரையும் வழிபட்டால் தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது ஐதீகமாகும்.

கால பைரவர் சில சிவன் கோவில்களில் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருவார், ஆடைகள் ஏதுமின்றி 12 கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண கோலத்தில் காட்சி தருவார்.

கால பைரவர், சனி பகவானின் குரு ஆவார். அந்த வகையில் இவரை சனிக் கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சனி தோஷம் தீரும். அதிலும், கால பைரவர் காலத்தை கட்டுப்படுத்தும் பைரவர் ஆவார்.
Tags:    

Similar News