தொழில்நுட்பம்
போக்கோ

இணையத்தில் லீக் ஆன போக்கோ ஸ்மார்ட்போன்

Published On 2020-07-03 04:29 GMT   |   Update On 2020-07-03 04:29 GMT
போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.



இந்தியாவில் போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஜூலை 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக போக்கோ வெளியிட்ட ஸ்மார்ட்போன் புகைப்படத்தின் படி, இதில் நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

ப்ளிப்கார்ட் டீசர்களின்படி போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இவைதவிர ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் ரகசியமாக உள்ளன.

எனினும், புதிய போக்கோ ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போக்கோ ஸ்மார்ட்போன் M2001J21 எனும் மாடல் நம்பருடன் சியோமி இந்தியா வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. 

இந்த ஸ்மார்ட்போனிற்கான கெர்னல் சோர்ஸ் கோட் விவரங்களில் புதிய ஸ்மார்ட்போன் கிராம் எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இதே சோர்ஸ் கோட் ரெட்மி நோட் 9 ப்ரோ மாடலுடன் ஒற்று போகிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News