செய்திகள்
திருப்பதி கோவில்

பலத்த மழை எதிரொலி- திருப்பதியில் 2 நாட்கள் நடைப்பாதைகள் மூடல்

Published On 2021-11-17 06:09 GMT   |   Update On 2021-11-17 07:44 GMT
வெளியூர்களில் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்கள் வாகனங்கள் வழியாக மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்காக வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வாகனங்கள் மூலம் வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மலைப்பாதையில் நடந்து சென்று தரிசனம் செய்வது வழக்கம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக அலிபிரி வழியாக செல்லும் நடைபாதையில் மழை வெள்ளம் புகுந்தது.

மேலும் நடைபாதையில் பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டதால் 2 நாட்கள் நடைபாதை மூடப்பட்டன.



இந்த நிலையில் புயல் சின்னம் காரணமாக பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலிபிரி வழியாக செல்லும் மலைப்பாதை மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதைகள் இன்றும் நாளையும் மூடப்படுகிறது.

வெளியூர்களில் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்கள் வாகனங்கள் வழியாக மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திருப்பதியில் 29,180 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12,850 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.63 கோடி உண்டியல் வசூலானது.


Tags:    

Similar News