செய்திகள்
கொரோனா பரிசோதனை

தாராவியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

Published On 2020-09-15 02:46 GMT   |   Update On 2020-09-15 02:46 GMT
தாராவியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. புதிதாக 23 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் தாராவியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 938 ஆகி உள்ளது.
மும்பை :

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் பாதிப்பு இருந்தது.

இந்தநிலையில் அங்கு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 3 நாளில் அங்கு 65 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று அங்கு புதிதாக 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தாராவியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 938 ஆகி உள்ளது. மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 156 ஆக அதிகரித்து உள்ளது. அதேவேளையில் இங்கு உயிரிழப்போர் பற்றிய விவரத்தை வெளியிடுவதை மாநகராட்சி நிறுத்தி விட்டது.

இதேபோல நேற்று மாகிமில் மேலும் 54 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 762 ஆகி உள்ளது. தாதரில் புதிதாக 39 பேருக்கு வைரஸ் நோய் ஏற்பட்டதால் அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. அதன்படி 3 ஆயிரத்து 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News