செய்திகள்
கோப்புபடம்

காமநாயக்கன்பாளையம் காட்டுப்பகுதியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் - தடுக்க கோரிக்கை

Published On 2021-09-20 07:45 GMT   |   Update On 2021-09-20 07:45 GMT
பல்லடம் - காமநாயக்கன்பாளையம் இடையே ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிகள் உள்ளன.
பல்லடம்:

பல்லடம் - பொள்ளாச்சி ரோடு, காமநாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி வழியாக கேரளாவை இணைக்கிறது. சரக்கு லாரிகள், கன்டெய்னர்கள், கறிக்கோழி வாகனங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் இவ்வழியாக வந்து செல்கின்றன.

பல்லடம் - காமநாயக்கன்பாளையம் இடையே ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிகள் உள்ளன. அங்கு காய்கறி, கோழி, இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்டவை விதிமுறை மீறி கொட்டப்பட்டு வருகின்றன. 

அவற்றுடன் கால்நடைகளின் உடல் உறுப்புகளும் வெட்டப்பட்ட நிலையில் கிடப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காட்டுப்பகுதியில் ஆடு மாடுகள் உள்ளிட்டவற்றின் தலை, உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் கிடக்கின்றன.  

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில்:

கால்நடைகள் சிலவற்றின் உடல் உறுப்புகள் வெட்டப்பட்ட நிலையில் வீசப்பட்டுள்ளன. இறந்த கால்நடைகளும் வீசப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. காட்டு மாட்டின் தலையும் கிடப்பதாக சந்தேகம் உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை தேவை என்றனர். 
Tags:    

Similar News