செய்திகள்
டென்மார்க் பிரதமரை வரவேற்ற மீனாட்சி லேகி

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார் டென்மார்க் பிரதமர்

Published On 2021-10-08 23:20 GMT   |   Update On 2021-10-08 23:20 GMT
இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்துப் பேச உள்ளார்.
புதுடெல்லி:

டென்மார்க் நாட்டின் பிரதமர் எச்.இ.மெட்டே பிரடெரிக்சன் 3 நாள் அரசுமுறை பயணமாக இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை செயலாளார் மீனாட்சி லேகி வரவேற்றார். மெட்டே 11-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை  சந்தித்துப் பேசுகிறார். இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கரையும் சந்தித்துப் பேச உள்ளார். இந்தியாவும், டென்மார்க்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பசுமை யுக்தி கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. அதுபற்றியும், இருநாடுகளுக்கும் இடையே உள்ள பல்வேறு விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளன. 

டென்மார்க்கில் 60-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களும், இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட டென்மார்க் நிறுவனங்களும் இருக்கின்றன. தொழில்நுட்பங்கள், விவசாயம், கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு இருக்கின்றன என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News