ஆட்டோமொபைல்
டாடா கார்

விரைவில் பிளாக் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்

Published On 2021-07-03 08:04 GMT   |   Update On 2021-07-03 08:04 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன் வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர், நெக்சான் மற்றும் அல்ட்ரோஸ் கார்களின் பிளாக் எடிஷன் வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் புது பிளாக் எடிஷன் மாடல்கள் டாடா விற்பனை மையகங்களை வந்தடையும் என தெரிகிறது. டாடா கார்களின் பிளாக் எடிஷன் மாடல் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.



முன்னதாக டாடா மோட்டார்ஸ் தனது ஹேரியர் மாடலின் டார்க்-தீம் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. ஹேரியர் டார்க் எடிஷன் மாடல் சந்தையில் ரூ. 18.35 மற்றும் ரூ. 19.60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

புதிய பிளாக் எடிஷன் கார்களின் வெளிப்புறம் பிளாக்டு-அவுட் தீம் கொண்டிருக்கும் என தெரிகிறது. வெளிப்புறம் மட்டுமின்றி, உள்புறத்திலும் கருப்பு நிறம் பூசப்படும் என தெரிகிறது. புது நிறம் தவிர காரின் அம்சங்களில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. 
Tags:    

Similar News