உள்ளூர் செய்திகள்
வை பை

தெற்கு ரெயில்வேயில் 543 ரெயில் நிலையங்களில் இலவச ‘வை-பை’ வசதி

Published On 2021-12-20 03:21 GMT   |   Update On 2021-12-20 03:21 GMT
நாடு முழுவதும் 6 ஆயிரத்து 70-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களில் வை-பை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

இந்தியன் ரெயில்வே பயணிகளின் வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு இணையதளம் வசதிகளை ‘வை-பை’ தொழில் நுட்பம் மூலம் வழங்குவதில் இந்தியன் ரெயில்வே முன்னோக்கி செல்கிறது. அந்தவகையில் தெற்கு ரெயில்வேயில் 5 ஆயிரத்து 87 கி.மீ வழிதடங்களை சுற்றியுள்ள 543 ரெயில் நிலையங்களில் அதிவேக ‘வை-பை’ இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கோட்டத்தில் 135 ரெயில் நிலையத்திலும், திருச்சி கோட்டத்தில் 105 ரெயில் நிலையத்திலும், சேலம் கோட்டத்தில் 79 ரெயில் நிலையத்திலும், மதுரை கோட்டத்தில் 95 ரெயில் நிலையத்திலும், பாலக்காடு கோட்டத்தில் 59 ரெயில் நிலையத்திலும், திருவனந்தபுரம் கோட்டத்தில் 70 ரெயில் நிலையத்திலும் வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 6 ஆயிரத்து 70-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களில் வை-பை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் ஒரு எம்.பி.பி.எஸ் வேகத்தில் முதல் 30 நிமிடத்துக்கு மட்டும் வை-பையை இலவசமாக உபயோகப்படுத்திக்கொள்ளலாம். 30 நிமிடத்துக்கு மேல் உபயோகப்படுத்தவும், இணையதள வேகத்தை அதிகப்படுத்தவும், பயனர் அதற்கான கட்டண திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். அந்தவகையில் நாள் ஒன்றுக்கு ரூ.10 கட்டணம் (34 எம்.பி.பி.எஸ் வேகத்தில் 5 ஜி.பி வரை) முதல் 30 நாள் வரை ரூ.75 கட்டணம் (60 ஜி.பி 34 எம்.பி.பி.எஸ்) செலுத்தி, ஜி.எஸ்.டி தவிர்த்து கட்டண விருப்பங்களுக்கு ஏற்ப திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News