செய்திகள்
தேஜஷ்வி யாதவ்

பீகாரில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் ஜனாதிபதியிடம் முறையிடுவோம்: தேஜஷ்வி யாதவ்

Published On 2021-01-16 11:36 GMT   |   Update On 2021-01-16 11:36 GMT
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது குற்றம்சாட்டிய தேஜஷ்வி யாதவ், குற்றங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் ஜனாதிபதியுடன் முறையிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் இண்டிகோ மானேஜர் ரூபேஷ் சிங் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

இச்சம்பவம் குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஷ்வி யாதவ் கூறுகையில் ‘‘ரூபேஷ் கொலை வழக்கு தொடர்பாக முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார். யாரிடம் நிதிஷ்குமார் முறையிடுகிறார். தொடர்ந்து 16 வருடங்கள் முதல்வராக இருந்து வருகிறார். மேலும் உள்துறை அவரிடம் உள்ளது. அப்படியிருக்கும்போது யாரிடம் முறையிடுகிறார்?. எதிர்கட்சிகளிடமா?.

இன்னும் ஒரு மாதத்திற்குள் குற்றங்கள் கட்டுக்குள் வரவில்லை என்றால், அப்புறம் மெகா கூட்டணி எம்எல்ஏ-க்கள் டெல்லி சென்று ஜனாதிபதியிடம் இங்குள்ள உண்மை நிலை குறித்து புகார் அளிப்போம்’’ என்றார்.
Tags:    

Similar News