செய்திகள்
கூட்டுறவு கடன் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்ற காட்சி.

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.650 கோடி கூட்டுறவு கடன் வழங்க இலக்கு

Published On 2021-11-27 08:51 GMT   |   Update On 2021-11-27 08:51 GMT
மாற்றுத்திறனாளிகள் கடன், சுய உதவிக்குழுக்கள் கடன், கறவை மாடு, ஆடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, நீர்ப்பாசன கடன் போன்ற கடன்கள் வழங்கப்படுகிறது.
திருப்பூர்:

கோவை மற்றும் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில் கூட்டுறவு கடன் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. முகாமில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள், பயிர்க்கடன் வழங்க பரிந்துரைத்தனர். பயிர்க்கடனாக தனிநபர் ஜாமீனில் ரூ. 1.60 லட்சம், அடமான கடனாக ரூ.3 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் கடன், சுய உதவிக்குழுக்கள் கடன், கறவை மாடு, ஆடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, நீர்ப்பாசன கடன் போன்ற கடன்கள் வழங்கப்படுகிறது. வட்டாரம் வாரியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் முகாம் நடந்து வருகிறது.

இதுகுறித்து திருப்பூர் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் சீனிவாசன் கூறுகையில்,  

திருப்பூர் மாவட்டத்துக்கு ரூ. 650 கோடி அளவுக்கு கூட்டுறவு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், குறுகியகால வேளாண் கடன் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம். 

நில உடமை சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோக்களுடன் விண்ணப்பித்து, பயிர்க்கடன் பெற்று பயன்பெறலாம் என்றார். 
Tags:    

Similar News