ஆன்மிகம்
திருவொற்றியூரில் உள்ள 42 அடி உயரமுள்ள முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற காட்சி

திருவொற்றியூரில் 42 அடி உயரமுள்ள முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்

Published On 2019-12-16 05:58 GMT   |   Update On 2019-12-16 05:58 GMT
திருவொற்றியூர் ஜோதி நகரில் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணிய பஞ்சாயதனேஸ்வர் கோவிலில் உள்ள சுமார் 42 அடி உயரமுள்ள பாலமுருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவொற்றியூர் ஜோதி நகரில் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணிய பஞ்சாயதனேஸ்வர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ரூ.18 லட்சம் செலவில், சுமார் 42 அடி உயரமுள்ள பாலமுருகன் சிலை நிறுவப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கணபதி ஹோமம், தன பூஜை, கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, நவக்கிரக பூஜைகள் நடைபெற்றது.

4-ம் கால பூஜையில் பூர்ணாஹீதி நிறைவுபெற்றதை தொடர்ந்து, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கைலாய வாத்தியங்களுடன் 42 அடி உயரமுள்ள முருகன் சிலைக்கு புனித நீர் ஊற்றினர்.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் முருகா, முருகா என பக்தி பரவச முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News