செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வழக்கு

முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வழக்கு

Published On 2019-10-21 12:44 GMT   |   Update On 2019-10-21 12:44 GMT
முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.
புதுடெல்லி:

இஸ்லாம் மதத்தில் ஒரே நேரத்தில் 'முத்தலாக்’ என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ள முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் 28-12-2017 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

அங்கு சிறிய விவாதத்துக்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் கிடைக்காததால் மாநிலங்களவையில் முடங்கிப் போனது.

இருப்பினும், ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அவசர சட்டமாக முத்தலாக் ஒழிப்பு சட்டம் 19-9-2018 அன்று அமல்படுத்தப்பட்டது. பின்னர், அடுத்தடுத்து மீண்டும் இருமுறை நீட்டிப்பும் செய்யப்பட்டது.



2019- பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று, மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் முத்தாலக் பழக்கத்திற்குத் தடை விதிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேறியது.

முத்தாலக் முறையில் மனைவியை விவாகரத்து செய்யும் கணவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

இந்த சட்டத்துக்கு எதிராக சில இஸ்லாமிய அமைப்புகளும் தனிநபர்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், அனைத்திந்திய முஸ்லிம்  தனிநபர் சட்ட வாரியத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷம்சாத் முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
Tags:    

Similar News