செய்திகள்
அமைச்சர் பொன்முடி

என்ஜினீயரிங் கல்லூரிகளில் 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் - அமைச்சர் பொன்முடி

Published On 2021-07-26 11:37 GMT   |   Update On 2021-07-26 11:37 GMT
அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைத்ததில் எந்த தவறும் இல்லை என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைத்ததில் எந்த தவறும் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அறிவித்து விட்டு வெறும் 4 பேரை மட்டுமே நியமித்துள்ளனர். அதற்காக எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.

இனி அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைப்பு பல்கலைக்கழகமாக ஜெயலலிதா பல்கலைக்கழகம் செயல்படும்.



என்ஜினீயரிங் கல்லூரிகளில் 75 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். பி.எட் படிப்புக்கும் கூடுதல் கட்டணங்களை வசூலிக்க கூடாது. இது தொடர்பாக உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News