செய்திகள்
கோப்புபடம்

21-ந் தேதி முதலமைச்சர் வருகை: குமரியில் அதிகாரிகள் ஆலோசனை

Published On 2020-09-11 08:39 GMT   |   Update On 2020-09-11 08:39 GMT
21-ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி கன்னியாகுமரியில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
நாகர்கோவில்:

தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதேபோல் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக குமரிக்கு வருகிற 21-ந் தேதி வருகிறார்.

இதையொட்டி முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அதாவது, நாகர்கோவில் துணை சூப்பிரண்டு வேணுகோபால், நாகர்கோவில் மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாஸ்கரன், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் தாணப்பன், நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருண் ஆகியோர் நேற்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

அப்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லை மார்க்கமாக நாகர்கோவில் வந்தால் ஒழுகினசேரி பாலத்தில் இருந்து எந்த பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும்? கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வந்தால் அவர் செல்லக்கூடிய பாதையில் உள்ள சாலைகள் சரியாக இருக்கிறதா? எந்தெந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்? என்பது குறித்து அவர்கள் நேரடியாக அந்தந்த பகுதிகளுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். எனவே நாகர்கோவில் நகரில் சாலைகளை சீரமைக்கும் பணி ஒன்றிரண்டு நாட்களில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News