செய்திகள்
பால்கனி அமைப்பது எப்படி

வீட்டில் பால்கனி அமைப்பது எப்படி?- ஜோதிடச்சுடர் எம்.எஸ். இராமலிங்கம்

Published On 2021-11-30 11:56 GMT   |   Update On 2021-11-30 11:56 GMT
வடக்கு பார்த்த வீடடில் வடக்குப் பக்கத்தில் சில வீடுகளில் வடகிழக்கில் மட்டுமே பால்கனி அமைத்திருப்பார்கள். இந்த வடகிழக்கு உள்ளடக்கிய பால்கனி 100 சதவீதம் உத்தமமானது.

குறிப்பாக ஒரு வீட்டில் பால்கனி எனும் அமைப்பு இரண்டு விதமாக அமைவது உண்டு. ஓன்று யாதெனில், வீட்டின் தாய்சுவருக்கு உள்ளடக்கமாக வரும் பால்கனி. மற்றொன்று, உங்கள் வீட்டின் தாய் சுவருக்கு வெளியே வீட்டைவிட்டு தனியே இருக்கும் பால்கனி.

தாய் சுவருக்கு உள்ளடக்கமாக வரும் பால்கனி அமைப்பு தெற்கு மற்றும் வடக்கு பார்த்த வீடுகளுக்கு அனேக நன்மைகளைத் தரும்.

முதலாவதாக வடக்கு பார்த்த வீடு உங்களுடையது எனில் கட்டிடத்தின் உள்ளடக்கமாக வடக்குப் பகுதி முழுவதும் சுமார் பத்து அடிகள் அகலமென வடக்கு தெற்காகவும், வீட்டின்முழு நீளமும் கிழக்கு மற்றும் மேற்காக பால்கனி கட்டலாம்.

இப்படியாக வடக்கு பார்த்த வீடடில் வடக்குப் பக்கத்தில் சில வீடுகளில் வடகிழக்கில் மட்டுமே பால்கனி அமைத்திருப்பார்கள். இந்த வடகிழக்கு உள்ளடக்கிய பால்கனி 100 சதவீதம் உத்தமமானது.

சில வீடுகளில் இப்படி வடக்கு பார்த்த உள்ளடக்கிய பால்கனியை வீட்டு முகப்பின் சரிபாதி மேற்கில் அமைப்பது, வடமேற்கில் மட்டும் பால்கனி அமைத்து வடகிழக்கில் பால்கனி இல்லாத நிலையில் கட்டிடம் அமைப்பது தவறாகும்.

அல்லது இந்த வடமேற்கு மூலையில் அமையும் பால்கனியானது, மேற்குச்சுவரில் இருந்து நான்கு அடிகள் கிழக்கில் அமைத்து கொள்ளலாம். இது 50 சதவீதம் தோ‌ஷத்தைக் குறைக்கும்.

இதேபோல வடக்கு பார்த்த வீட்டிற்கு தாய்சுவரின் வெளியே தனியாக இருக்கும்படி பால்கனி அமைக்கும் போதும் சில விதிகளைக் கவனிக்க வேண்டியதுள்ளது.

அதாவது, வடகிழக்கில் வடக்கு பார்த்தும் வடகிழக்கில் கிழக்கு பார்த்தும், பால்கனி அமைக்கலாம், உயரத்தில் இந்த பால்கனியானது சற்று பள்ளமாக அமையுமாயின் மிகச் சிறப்பு.

முடிந்த மட்டும் இந்த வடகிழக்கு மூலையில் அமையும் பால்கனியில் அசுத்தமான நடவடிக்கைகள் கூடாது. துணிகள் உலர்த்துவதற்கும், பூச்செடிகள் வைப்பதற்கும், மிக உகந்த இடம், கூடிய மட்டும் இந்த பால்கனியை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

இது போல உங்கள் வீட்டின் தெற்குத் திசையில் பால்கனி அமைவது எப்படியான நன்மை தீமைகளை உண்டாக்கும் என பார்த்தோமானால், குறிப்பாக தென்பாகத்தில் உள்ளடக்கிய பால்கனியாக தென்பக்கம் முழுவதையும் விட்டுவிடுவது நன்மை தராது.


மொட்டைமாடியாக இருந்தால் கூட வடபகுதியில் கட்டிடம் கட்டிவிட்டு, மொட்டை மாடியின் தென் பகுதியை காலியாகவிடுவது மிகப் பெரிய குறையை ஏற்படுத்திவிடும்.

இது போலத்தான் வீட்டில் உள்ளடக்கிய பால்கனி ஆனாலும் மொத்த தென்பகுதி முழுவதும் காலியாக விடுவது ஏற்புடையதல்ல.

இந்த அமைப்பு குடும்பத்தில் உள்ள பெண்களின் வாழ்வை பாதிக்கும். உடல் நலம் உற்சாகமிழந்து கெடும்.

ஆனால், இந்த பால்கனியானது, தாய்சுவருக்கு வெளியே அமைந்திருக்குமாயின் சில குறைகளை உண்டாக்கும். இந்த மாதிரி வெளியே அமைந்திருக்கும் பால்கனியால், வாஸ்து தோ‌ஷம் உண்டாகி, அந்தக் குடும்ப நபர்கள் ஒழுக்கக்குறைபாடுகள் காரணமாகப் பெயர் கெடுவதும், மேலும் உடல் நலம் பாதிக்கப்படுவதுமாய் அனேகச் சிக்கல்கள் உண்டாகிவிடும்.

சில வீடுகளில், வடகிழக்கு மூலையை சற்றே விட்டு விட்டு, கொஞ்சம் தெற்குதள்ளி பால்கனி வைத்துவிடுவார்கள். இதுவும் அனேகமான குறைபாடுகளைத் தந்துவிடும்.

இது போல, கிழக்குப் பக்கத்தில் பால்கனி அமைகிறபோது, அந்தக் குறிப்பிட்ட இடமானது, வீட்டின் உள்ளே இருக்கும் தரைத்தளத்தைவிட சற்றே குறைவாகப் பள்ளமாக இருப்பது விசே‌ஷம்.

இது போல கிழக்கு பார்த்த வீட்டிற்கு, அல்லது கிழக்குப் பக்கத்தில் பால்கனி அமைக்கும் போதும் சில விதிகள் உண்டு. என்னவெனில், தாய்சுவருக்கு உள்ளடக்கமாக பால்கனி அமைக்கவேண்டுமெனில் வீட்டின் கிழக்கு மையத்திலும் அதேபோல வீட்டின் வடகிழக்கிலும் கிழக்கு நோக்கி உள்ளடக்கமாக பால்கனி அமைக்கலாம்.

சில வீடுகளில் வீட்டின் மொத்தமான கிழக்குத் திசையில் வடக்கிலிருந்து தெற்குவரை பால்கனி அமைத்திருப்பார்கள்.

இது பூக்கூடைக்குப் பக்கத்தில் கருவாட்டுக் கூடையை வைத்தது போலாகும்.. ஏனெனில், தென்கிழக்கில் பால் கனி அமைப்பு விசே‌ஷமானதல்ல.

முடிந்த மட்டும் கிழக்கு பார்த்த வீட்டுக்கு வீட்டின் கிழக்கு மையத்திலும், வீட்டின் வடகிழக்கு மூலையிலும் மட்டும் பால்கனி அமைவது மிக நன்மை தரும்.

இது போல உங்கள் வீட்டின் தெற்குத் திசையில் பால்கனி அமைவது எப்படியான நன்மை தீமைகளை உண்டாக்கும் என பார்த்தோமானால், குறிப்பாக தென்பாகத்தில உள்ளடக்கிய பால்கனியாக, தென்பக்கம் முழுவதையும் விட்டுவிடுவது நன்மை தராது.

மொட்டைமாடியாக இருந்தால் கூட வடபகுதியில் கட்டிடம் கட்டிவிட்டு, மொட்டைமாடியின் தென்பகுதியை காலியாக விடுவது மிகப் பெரிய குறையை ஏற்படுத்திவிடும்.

இது போலத் தான், வீட்டில் உள்ளடக்கிய பால்கனி ஆனாலும் மொத்த தென்பகுதி முழுவதும் காலியாக விடுவது ஏற்புடையதல்ல.

இந்த அமைப்பு குடும்பத்தில் உள்ள பெண்களின் வாழ்வை பாதிக்கும். உடல் நலம் கெடுவதும், உற்சாகமிழந்து அவஸ்தைப் படுவதுமாக குடும்ப நிம்மதி கெடும்.

இதுபோல, தென்கிழக்கில் சமையல் அறையும், தென்மேற்கில் படுக்கை அறையும் அமைத்து விட்டு, இரண்டுக்கும் இடையே உள்ள தெற்கின் மத்திய பாகத்தில் பால்கனி அமைப்பதும் தீங்கையேத் தரும்.

சில வீடுகளில் மேலே சொன்னது போல நடுப்பாகத்தில் தாய்சுவருக்கு வெளியே பால்கனி அமைப்பதும் சிறப்பில்லை.

இதுபோல, தென்கிழக்குப்ப பகுதியில் உள்ளடக்கிய பால்கனி வருவதும் சிறப்பானதல்ல. குறிப்பாக இந்த அமைப்பு வீட்டில் வாழும் பெண்களுக்கு துன்பங்களைக் கொடுக்கும்.

இப்படி தென்கிழக்கில் பால்கனி வருகிற காரணத்தால், சமையல் அறையானது சிலவீடுகளில் வடமேற்கில் அமைத்திருப்பார்கள். இதுவும் குறைகளையே உண்டாக்கும்: இந்த அமைப்பானது வீட்டில் உள்ள ஆண்களுக்கு நிம்மதியற்றதொரு பிழைப்பாகிவிடும்.

இப்படி தென் திசையில் பால்கனி வைக்கும் போது, தென் மேற்கில் பால்கனி வரலாம். ஆனால் அந்த பால்கனியானது திறந்த நிலையில் அமையக் கூடாது. கண்ணாடி ஜன்னல்கள் வைத்து - வெளிச்சம் காற்று உள்ளே புகாதபடி வைத்துக் கொள்ளலாம்.

சில வீடுகளில் தென்கிழக்கில் சமையல் அறை அமைத்து, அந்த சமையல் அறையை ஒட்டி, தென்பக்கத்தில் பால்கனி அமைத்து சமையல் அறையின் உள்ளிருந்து பால்கனிக்கு சென்று புழங்குவதாய் அமைத்திருப்பார்கள். இது பெரிய சிக்கல் இல்லை. ஓரளவு இந்த அமைப்பு ஏற்புடையதே.

இதைபோல மேற்கு பார்த்த வீடுகளில், அல்லது வீட்டின் மேற்குப் பக்கத்தில் பால்கனி அமைக்கும் போதும் கவனிக்க வேண்டிய அமைப்புகள் என்னவெனில், குறிப்பாக மேற்கு பார்த்த வீட்டில் முதல் தளத்தில், சிலர் மேற்குப்பகுதியில், தெற்கிலிருந்து, வடக்குவரை, கிழக்கு மற்றும் மேற்காக பத்து அடிகள் விட்டு நீளமாக உள்ளடக்கமான பிரமாண்டமான பால்கனி அமைக்கிறார்கள்.

இந்த அமைப்பானது, வாஸ்துவின்படி பெரிய தோ‌ஷத்தை உண்டாக்கும் . இப்படியான வீடுகளில் வசிப்போர் எல்லா வி‌ஷயத்திலும் எப்போதும் பற்றாக்குறை என்ற கடினமான சூழலை அனுபவிக்கநேரிடும்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் தென்மேற்கில் மற்றும் வட மேற்கில் மிகச் சரியாக படுக்கை அறை அமைத்து, இரண்டுக்கும் இடைப்பாகமாக, சரியான நடு மேற்கில், தாய்சுவருக்கு உள்ளடக்கி பால்கனி அமைத்திருப்பார்கள். இது தீமை செய்யாது.

ஆனால், இந்த பால்கனிக்குச் செல்லும் வாசலானது, குறிப்பிட்ட பால்கனிக்கு, வடகிழக்கு வழியாக பால்கனிக்குச் செல்லும்படி அமைக்கவேண்டும்.

குறிப்பிட்ட மேற்குப் பாகத்தில் தாய் சுவருக்கு வெளியே பால்கனி அமைக்க வேண்டுமாயின் உங்கள் வீட்டின் வட மேற்கில், மேற்கு பாகத்தில் பால்கனி அமைக்கலாம்.

இந்த அமைப்பு இந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நன்மையே தரும். ஆனால், இந்த பால்கனிக்கு உள்ளே சென்றுவர வாசலானது பால்கனியின் வடகிழக்கில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இதே போல, மேற்குத்தி சையில், வடமேற்கில் தாய்ச் சுவருக்கு உள்ளடக்கி பால்கனி வைத்துக்கொள்ளுவது அதி உத்தமம்.

பொதுவாக மேற்குப்பக்கத்தில் அமையும் பால்கனியின் தரைத்தளம் மற்ற இடங்களின் தரைத் தளத்தைவிட பள்ளமாக இருத்தல் கூடாது. சற்று உயரமாக இருப்பது விசே‌ஷமான அமைப்பாகக் கருதப்படுகிறது.

இதே போல, மேற்குப்பக்கத்தில் பால்கனி வைக்கும்போது தென்மேற்கில் வடக்கு, தெற்காக, நீளமாக பால்கனி அமைவது பெரும் தீமையாக அமையும்.

சில வீடுகளில் தென் மேற்கில் மிக அழகாக படுக்கை அறை அமைத்து அந்தப்படுக்கை அறையின் உள்ளே மேற்குப்பாகத்தில், படுக்கை அறையில் இருந்து பால்கனிக்குள் செல்வது போல் அமைத்திருப்பார்கள்.

இருப்பதிலேயே இந்த அமைப்புதான் மோசமான அமைப்பாகும். இதை கட்டாயம். தவிர்க்க வேண்டும்.

குறிப்பிட்ட ஒரு வீட்டில், தென்மேற்கு எப்போதும் அடைத்து வைக்கப்படுவதும், தென்மேற்கில் தான் குடும்ப ரகசியங்கள் பாதுகாக்கப்படுவதும் மிக அதி முக்கியம். மேலும், தென்மேற்கு மூலை வழியாகத்தான், திருட்டு சம்பவங்கள் நடைபெறும் என்பதால், தென் மேற்கு மூலையில் ஜன்னல் வைப்பதே கூடாது.

இதேபோல, ஒரு குறிப்பிட்ட வீட்டில் வடகிழக்கு மூலை நன்றாக திறந்து வைப்பதும், வெளிச்சம், காற்று வரும்படி அமைப்பதும் மிக முக்கியம் என்பதால் வீட்டில், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு மூலைகளை சரியாகப் பயன்படுத்துமாறு வீட்டைக் கட்டிக் கொள்ளவேண்டும்.ஆகவே, மேற்குத்திசை என்று எடுத்துக் கொண்டால் வடமேற்கில் மட்டும் உள்ளடக்கியோ அல்லது தாய் சுவருக்கு வெளியிலோ பால்கனி அமைத்துக் கொண்டு, அந்த பால்கனிக்குச் சரியாக வாசலும் வைத்துக் கொண்டால் மிகச் சிறப்பாக அமையும்.

தொடர்புக்கு: msramalingamastrologer@gmail.com

Tags:    

Similar News