ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி ஸ்விப்ட்

விரைவில் இந்தியா வரும் ஸ்விப்ட் சி.என்.ஜி.

Published On 2021-07-28 08:12 GMT   |   Update On 2021-07-28 08:12 GMT
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்விப்ட் மற்றும் டிசையர் மாடல்களின் புது வேரியண்டை அறிமுகம் செய்ய இருக்கிறது.


மாருதி சுசுகி நிறுவனம் ஸ்விப்ட் மற்றும் டிசையர் சி.என்.ஜி. வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு மாடல்களிலும் மாருதியின் எஸ்-சி.என்.ஜி. தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. மேலும் இவற்றில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் அதிக சி.என்.ஜி. மாடல்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாருதி இருக்கிறது. இந்நிறுவன மாடல்களில் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் சி.என்.ஜி. பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஈக்கோ சி.என்.ஜி. எம்.பி.வி. மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.



தற்போதைய தகவல்களின்படி ஸ்விப்ட் மற்றும் டிசையர் சி.என்.ஜி. வேரியண்ட்களில் 1.2 லிட்டர் டூயல் ஜெட் வி.வி.டி. என்ஜின் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த என்ஜின் பலத்தரப்பட்ட எரிபொருள்களில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதனால் இவற்றின் செயல்திறன் சற்றே குறைந்து இருக்கும் என தெரிகிறது. 

தற்போதைய பெட்ரோல் என்ஜின் 88 பி.ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறனை வழங்குகிறது. சி.என்.ஜி. வேரியண்ட் இதைவிட 10 சதவீதம் குறைந்த திறன் கொண்டிருக்கும். புதிய சி.என்.ஜி. வேரியண்ட்களின் விலை பெட்ரோல் மாடல்களை விட அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.

Tags:    

Similar News