லைஃப்ஸ்டைல்
மூங்கில் அரிசி பாயாசம்

சூப்பரான மூங்கில் அரிசி பாயாசம்

Published On 2020-09-07 10:35 GMT   |   Update On 2020-09-07 10:35 GMT
மூங்கில் அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த அரிசியை வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மூங்கில் அரிசி - கால் கப்,
பால் - 4 கப்,
வெல்லத்தூள் - அரை கப்,
தேங்காய்த் துருவல் - அரை கப்,
நெய் - 2 டீஸ்பூன்,
உலர் திராட்சை, முந்திரி. - தேவையான அளவு
ஏலக்காய்த்தூள்- சிறிதளவு



செய்முறை:

மூங்கில் அரிசியை கழுவி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து, மிக்சியில் சேர்த்து தண்ணீர் தெளித்து கொரகொரப்பாக அரைக்கவும்.

பாலை பாதியாகும் வரை சுண்டக்காய்ச்சவும்.

அடிகனமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து நன்கு வேகவைக்கவும்.

வாணலியில் நெய்யைச் சூடாக்கி முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.

பிறகு, அதே நெய்யில் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

வேகவைத்த மூங்கில் அரிசி மாவுடன், பால், வெல்லத்தூள், தேங்காய்த் துருவல், முந்திரி, திராட்சை சேர்த்து, ஒரு கொதி விட்டு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.

சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறலாம்.

சூப்பரான மூங்கில் அரிசி பாயாசம் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News