ஆன்மிகம்
பிரதோ‌ஷ விழா

சோழவந்தான் சிவாலயங்களில் பிரதோ‌ஷ விழா

Published On 2021-07-09 04:10 GMT   |   Update On 2021-07-09 04:10 GMT
சோழவந்தான் வைகை ஆற்று கரையில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பிரளயநாத (சிவன்) கோவிலில் சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
சோழவந்தான் வைகை ஆற்று கரையில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பிரளயநாத (சிவன்) கோவிலில் பிரதோ‌ஷ விழா நடைபெற்றது.

சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. எம்.வி.எம். குழுமம்தலைவர் மணி முத்தையா, நிர்வாகி வள்ளியம்மாள், தாளாளர் மருதுபாண்டியன், பிரதோ‌ஷ கமிட்டியினர், தக்கார் இளமதி மற்றும் கோவில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் பிரதோ‌ஷ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது.

பரம்பரை அறங்காவலர் சேவுகன் செட்டியார், செயல் அலுவலர் இளஞ்செழியன் மற்றும் கோவில் பணியாளர்கள் பிரதோ‌ஷ கமிட்டியினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதேபோல் மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி ஈஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோ‌ஷ விழா நடந்தது.

பூஜைக்கு பின்னர் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனத்திற்கு அனுமதித்தனர்.
Tags:    

Similar News