ஆன்மிகம்
தீபாவளி பண்டிகை

வரலாற்று சிறப்பு மிக்க தீபாவளி கொண்டாட்டம்

Published On 2020-11-13 08:35 GMT   |   Update On 2020-11-13 08:35 GMT
தீபாவளி இந்தியாவில் மட்டுமல்ல, நமது அண்டை நாடுகளான வங்காளதேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெயர்களும் கொண்டாடும் முறைகளிலும் மாற்றம் உள்ளது.
தீபாவளி கொண்டாட முக்கிய காரணம், கிருஷ்ணரின் லீலை தான் என்பது அனைவரும் அறிந்ததே. உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றி பெறுகிறார் கிருஷ்ணன். ஆனால் அதேசமயம் நரகாசூரன், கிருஷ்ணரிடம் எனது மறைவை மக்கள் தீபாவளி பண்டிகையாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை கிருஷ்ணர் ஏற்றுக் கொள்கிறார். அதனால் தோன்றியதான் தீபாவளி. இதன் பின்னர் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றியது.

தீபாவளி இந்தியாவில் மட்டுமல்ல, நமது அண்டை நாடுகளான வங்காளதேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெயர்களும் கொண்டாடும் முறைகளிலும் மாற்றம் உள்ளது. தமிழ் மன்னர்களுக்கு பண்டைய காலத்தில் ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருந்தது. அந்த வணிக தொடர்பின் போது, இந்தியாவில் இருந்து சென்ற பல வாணிகர்களும் தாங்கள் இருந்த இடத்தில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளை கொண்டாடி உள்ளனர். இதனால் அங்கும் இந்திய கலாசாரம் பரவ ஆரம்பித்தது. மேலும் இந்தியாவில் பேரரசர்களாக இருந்தவர்களும் மக்களின் விருப்பத்தை ஏற்று, தீபாவளியை சிறப்பாக கொண்டாடி உள்ளனர். சில மன்னர்கள் அதற்காக போட்டிகளையும், வீர விளையாட்டுகளையும் நடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்து மக்கள் மகிழ்கிறார்கள். தமிழர் பரம்பரையும், பண்டைய வழக்கங்களும் தொண்டு தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. தீபாவளி கொண்டாட்டத்திலும் தமிழ் பாரம்பரியம் விளங்கும் வகையில் தமிழர் ஆடை உடுத்தி கொண்டாடலாம். தற்போது வரை தீபாவளி கொண்டாட்டம் என்பது வரலாற்று சிறப்பு மிக்கதாகவே விளங்கி வருகிறது.
Tags:    

Similar News