செய்திகள்
கோப்புபடம்

குளங்களில் நீர்மட்டம் குறைவதால் விவசாயிகள் கவலை

Published On 2021-06-10 08:37 GMT   |   Update On 2021-06-10 08:37 GMT
கிராம குளங்களில் 6 மாதங்களுக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றால் நிலத்தடி நீர்மட்டத்துக்கு உதவியாக இருக்கும்.
உடுமலை:

உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக குளங்கள் உள்ளன. ஒன்றிய, ஊராட்சிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இக்குளங்களுக்கு வடகிழக்கு, தென்மேற்கு பருவமழைக்காலத்தில் நீர்வரத்து இருக்கும். மேலும்  பி.ஏ.பி., பாசன காலத்தில் மழை பெய்தால் விளைநிலத்தில் நீரை வீணடிக்காமல் அருகிலுள்ள குளத்தில் தேக்குவது வழக்கம்.

தற்போது தென்மேற்கு பருவமழை துவங்காமல் தாமதித்து வருவதால் குளங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கிராம குளங்களில் ஆறு மாதங்களுக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றால் நிலத்தடி நீர் மட்டத்துக்கு உதவியாக இருக்கும். ஆனால் பாசன காலத்தில் தேக்கும் தண்ணீர் பருவமழைக்கு முன்னதாகவே வற்றிவிடுகிறது. பருவமழை பொழிவு நன்றாக இருந்தால் குளங்கள் வறண்டு விடும் நிலை தவிர்க்கப்படும் என்றனர்.
Tags:    

Similar News