செய்திகள்
கமல்ஹாசன்

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பட்டியல்- கமல்ஹாசன் அறிவிப்பு

Published On 2020-08-04 05:07 GMT   |   Update On 2020-08-04 05:07 GMT
புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த 30-ந்தேதி புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர், ‘புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்தை வலுப்படுத்த வேண்டும். புதுச்சேரியின் மிக முக்கிய அரசியல் கட்சியாக மக்கள் நீதி மய்யம் வலுப்பெற்று அங்கு ஆட்சி அமைத்திடும் சூழலை உருவாக்க வேண்டும்’ என்று நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில் அவர், புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாளர்கள் பட்டியல், மாநில அணி நிர்வாகிகள் மற்றும் தொகுதிவாரியான நிர்வாகிகள் பட்டியலை நேற்று வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன், துணைத் தலைவர் ஆர்.தங்கவேலு, பொதுச்செயலாளர்கள் பேராசிரியர் எ.மு.ராஜன்(நகரம்), ப.முருகேசன்(புறநகரம்), டாக்டர் ராஜா அரங்கசாமி(காரைக்கால்), பொருளாளர் வக்கீல் தாமோ. தமிழரசன்.

மாநில செயலாளர்கள்- நிர்மலா சுந்தரமூர்த்தி, ராம.அய்யப்பன், ஏ.கே.நேரு, ஜி.ஆர்.சந்திரமோகன், ஜே.பிராங்கிளின் பிரான்சுவா, மலர்விழி என்கிற சுந்தராம்பாள், எஸ்.சக்திவேல், வி.ரூபன் கிரிஸ்டோபர் தாஸ், ஆர்.பி.விவேகானந்தன், ரா.அரவிந்த்ராஜ்.


புதுச்சேரி மக்கள் நீதி மய்யத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் டி.தனலட்சுமி, மகளிர் தொண்டர் அணி செயலாளர் ஏ.கவுரி ஐயம்பெருமாள், நற்பணி இயக்க அணி செயலாளர் எஸ்.ஜோஸ்பின், இளைஞர் அணி செயலாளர் டி.பாலா என்கிற பாலசுப்பிரமணியன், தொண்டர் அணி செயலாளர் வி.எம்.முருகன், தொழில் வல்லுநர் அணி செயலாளர் டி.குருமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கொர்னத் இன்னாசி செயின்ட் ராக், வர்த்தகர் அணி செயலாளர் கே.லட்சுமணசாமி என்கிற சேகர், ஆதிதிராவிடர் நல அணி செயலாளர் பி.ஞானஒளி, மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சுழல் அணி செயலாளர் டி.பாலாஜி, கலை மற்றும் இலக்கிய அணி செயலாளர் ஆர்.அரிகிருஷ்ணன், மீனவர் அணி செயலாளர் சி.கே.பவானந்தன், சிறுபான்மையினர் அணி செயலாளர் ஏ.முகமது பெரோஸ் கான், தொழிலாளர் அணி செயலாளர் ஏ.கண்ணன், தொழிலாளர் நல அணி செயலாளர் வி.சண்முகம், விவசாய அணி செயலாளர் எம்.குமரன், மாணவர் அணி செயலாளர் சி.தினேஷ்.

மேற்கண்ட தகவல் மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News