செய்திகள்
சென்னை மாநகராட்சி

சென்னையில் 1 லட்சத்து 57 ஆயிரம் போஸ்டர்கள் அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை

Published On 2021-09-20 07:46 GMT   |   Update On 2021-09-20 10:20 GMT
சென்னையில் மொத்தம் 57 ஆயிரத்து 374 இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை:

‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சென்னையில் அரசு சுவர்கள் மற்றும் பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதை மீறி போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றி விட்டு அங்கு வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு பகுதியிலும் எங்கெங்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன? என்பதை கண்காணித்து அவற்றை அகற்றி வருகின்றனர்.

சென்னையில் மொத்தம் 57 ஆயிரத்து 374 இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரத்து 527 போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன.

இன்று மட்டும் 210 இடங்களில் ஒட்டப்பட்டிருந்த 1,159 போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்... உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு- வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்

Tags:    

Similar News