லைஃப்ஸ்டைல்
கழுத்துவலி நீங்க யோகப் பயிற்சிகள்

கழுத்துவலி நீங்க யோகப் பயிற்சிகள்

Published On 2020-05-20 04:10 GMT   |   Update On 2020-05-20 04:10 GMT
யோகாசனம் ஒன்றே மனோரீதியாகவும் மாற்றத்தை அளிக்கும். நரம்பு மண்டலத்தின் சமத்துவத்தை ஏற்படுத்தும். நாடிதுடிப்பை மிதமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் ஏற்படும் வலியைக் குறைத்து பின்பு முழுமையாக சரி செய்துவிடும்.
கழுத்துவலி நீங்க யோகப் பயிற்சிகள்

அதிக மனக்கவலை உள்ளவர்களுக்கும், அலுவலகத்தில் பல மணிநேரம் கம்ப்யூட்டர் பார்த்து வேலை செய்பவர்களுக்கும், அதிகமான மசாலா உணவு உண்டு உடலில் வாயு சம்பந்தமான உபாதை உள்ளவர்களுக்கும், அடிக்கடி சைனஸ், சளி உபாதை உள்ளவர்களுக்கும், நுரையீரல் பலவீனம், இதயம் பலவீனமானவர்களுக்கும் இந்த கழுத்துவலி அதிகம் வரும். இதனை இனி வரும் பயிற்சிகள் மூலமாக பூரணமாகக் குணமாக்க முடியும்.

பயிற்சி - 1: கழுத்துவலி நீங்க யோகப் பயிற்சிகள்

மன இறுக்கம், மன அழுத்தம், டென்ஷன், பதட்டம் முதலில் நீங்க வேண்டும். அதற்கு கீழ்கண்ட பயிற்சி மிக அவசியம்.
விரிப்பில் சாதாரணமாக கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடிக் கொள்ளுங்கள். இரு கைகளிலும் சூன்யமுத்திரை செய்யவும். அதாவது நமது நடுவிரலின் மேல் கட்டை விரலை வைத்து, கட்டை விரலால் லேசான அழுத்தம் கொடுக்கவும். மீதி விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
இப்பொழுது இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். அப்பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணன் உடலில் செல்வதாக எண்ணவும். உடன் மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை வெளியிடவும். அப்பொழுது உடல், மனதிலுள்ள டென்ஷன், அழுத்தம் உடலைவிட்டு வெளியேறுவதாக எண்ணவும். இதுபோல் பத்துமுறைகள் செய்யவும்.
இப்பொழுது உங்களது மூச்சோட்டத்தை கழுத்துப்பகுதி முழுவதும் நன்கு பரவுவதாக எண்ணி இரண்டு நிமிடம் கழுத்துப் பகுதியில் கவனம் செலுத்தவும். பின் மெதுவாகக் கண்களை திறந்து கொள்ளவும். கை விரல்களை சாதாரணமாக வைத்துக் கொள்ளவும்.
    
பயிற்சி - 2: இடுப்பை உயர்த்துதல்

* விரிப்பில் முதலில் நேராகப் படுத் துக் கொள்ளவும்.
* இரு கால்களை யும் மடக்கவும். ஒரு அடி இடைவெளிவிட்டு கால் பாதங்கள் தரையில் இருக்கவும்.
* இரு கைகளை யும் குதிகால் பக்கத்தில் கைவிரல் படும்படி வைக்கவும். (படத்தை பார்க்க)
* இப்பொழுது மூச்சை உள் இழுத்துக் கொண்டு இடுப்பை மட்டும் உயர்த்தவும்.
* இந்நிலையில் பத்து விநாடிகள் மூச் சடக்கி இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும்.
இதுபோல் மூன்று முறைகள் செய்ய வேண்டும்.

பயிற்சி 3:

பயிற்சி 2-ல் செய்தபடி முதலில் இடுப்பை உயர்த்தவும். பின் இருகைகளையும் தலைக்குப் பின்னால் கட்டிக்கொள்ளவும். அந்நிலையில் மூச்சடக்கி 10 விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளியிட்டு சாதாரண நிலைக்கு வரவும். இதுபோல் மூன்று முறைகள் செய்யவும்.
பயிற்சி 4: வஜ்ராசனத்தில் கையை உயர்த்தல்
* விரிப்பில் முதலில் வஜ்ராசனத்தில் அமரவும்.
* இப்பொழுது இருகைகளையும் கோர்த்து காதோடு உயர்த்தி படத்திலுள்ளது போல் தலைக்கு மேல் வைக்கவும். கை விரல்களும் பின்னி உள்ளங்கை வானத்தைப் பார்க்க வேண்டும்.
* கைகள் காதோடு சேர்ந்து நேராக படத்திலுள்ளது போல் இருக்க வேண்டும்.
* இப்பொழுது இரு நாசி வழியாக மூச்சை உள் இழுக்கவும். உடன் இருநாசி வழியாக மூச்சை வெளிவிடவும். முதலில் 5 முறைகள் மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பின் 5 முறைகள் வேகமாக மூச்சை உள் இழுத்து வேகமாக மூச்சை வெளிவிடவும்.
* பின் மீண்டும் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக 5 முறைகள் மூச்சை வெளிவிடவும்.
* பின் சாதாரண நிலைக்கு வரவும்.
நம் உடலில் வாதம், பித்தம், கபம் அதனதன் ஒழுங்கு விகிதத்தில் மாறுதல் ஏற்படும் பொழுது நோய், கழுத்து வலி வருகின்றது. திருமூலர் இதனை-
அஞ்சனம் போன்றுடல் ஐயறும் அந்தியில்
வஞ்சக வாத மறுமத்தியானத்தில்
செஞ்சிறு காலையில் செய்திட பித்தமும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே
என்கிறார்.
அதாவது காலையில் யோகா செய்தால் பித்த நோய் தீரும். மாலையில் யோகா செய்தால் கபம் தீரும். மதியம் யோகா செய்தால் வாத நோய் தீரும் என்கிறார். மூன்று வேளை யோகா செய்பவருக்கு முடி கூட நரைக்காது என்கிறார்.
மருத்துவரிடம் சென்று கழுத்துவலிக்கு காலை, மதியம், மாலை மூன்று நேரம் மாத்திரை வாங்கி சாப்பிட்டு அதனால் வயிறு புண்பட்டு பக்க விளைவு வந்தது போதும்.
இனி மேற்குறிப்பிட்ட யோகப்பயிற்சிகளை காலை, மதியம், மாலை மாத்திரைப் போல் பயிற்சி செய்யுங்கள். எந்த பக்க விளைவும் கிடையாது. பணமும் செலவாகாது. மனமும் அமைதி பெறும். கழுத்துவலி காணாமல் போய்விடும்.
Tags:    

Similar News