ஆட்டோமொபைல்
டாடா கிராவிடாஸ் டீசர்

சோதனையில் சிக்கிய டாடா கிராவிடாஸ்

Published On 2019-12-12 11:26 GMT   |   Update On 2019-12-12 11:26 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிராவிடாஸ் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



டாடா நிறுவனத்தின் கிராவிடாஸ் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. டாடா ஹேரியர் காரின் ஏழு பேர் பயணிக்கும் கார் கிராவிடாஸ் பெயரில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது.

டாடா கிராவிடாஸ் கார் ஹேரியர் போன்று OMEGA தளத்தில் உருவாகி இருக்கிறது. புதிய காரில் குவாட்டர் கிளாஸ், டி பில்லர், பெரிய ரூஃப் ரெயில்கள், மேம்பட்ட வடிவமைப்பு கொண்ட கண்ணாடிகள், கிளாஸி பிளாக் ORVMகள் வழங்கப்பட்டுள்ளன. அளவில் கிராவிடாஸ் கார் ஹேரியர் மாடலை விட நீளமாக இருக்கிறது.



காரின் பின்புறம் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. அதன்படி புதிய ஸ்மோக்டு டெயில்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், பெரிய ஸ்பாயிலர் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்படுகிறது.

என்ஜினை பொருத்தவரை டாடா கிராவிடாஸ் காரில் ஃபியாட் தயாரித்த 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 170 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

புதிய கிராவிடாஸ் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகமானதும் இந்த கார் ஃபோர்டு என்டேவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.

புகைப்படம் நன்றி: MotorOctane
Tags:    

Similar News