செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்

நோய்தொற்று ஏற்படுவதால் கூடுதல் முகவர்களை தயாராக வைத்திருங்கள்- தேர்தல் துறை உத்தரவு

Published On 2021-04-29 07:21 GMT   |   Update On 2021-04-29 07:21 GMT
வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழையும்போது கொரோனா இல்லை என்ற சான்றிதழை வழங்க வேண்டும் அல்லது 2 முறை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை வழங்க வேண்டும்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2-ந்தேதி நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் தொகுதி வாரியாக வேட்பாளர்களுக்கான முகவர்களை அனுப்புவார்கள். இதற்கான பெயர் பட்டியலை ஏற்கனவே வேட்பாளர்கள் கொடுத்துள்ளனர்.



அவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி கொரோனா சோதனை செய்து வருகிறார்கள். அதில் பலருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழையும்போது கொரோனா இல்லை என்ற சான்றிதழை வழங்க வேண்டும் அல்லது 2 முறை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை வழங்க வேண்டும்.

முகவர்கள் பலருக்கும் தொற்று ஏற்பட்டிருப்பதால் கூடுதலாக முகவர்களை தயார்நிலையில் வைத்துக்கொள்ளும்படி தேர்தல் துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வேட்பாளர்களுக்கு மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் இந்த உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறார். இதையடுத்து அனைத்து வேட்பாளர்களும் கூடுதல் வேட்பாளர்களை தயார்படுத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News