செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் இருந்து வடமாநிலங்களுக்கு இளநீர் ஏற்றுமதி

Published On 2021-10-22 06:29 GMT   |   Update On 2021-10-22 06:29 GMT
தோப்புகளில் இருந்து ஒரு இளநீர் ரூ.25 வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கிருந்து தேங்காய் மட்டுமின்றி இளநீரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்களுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது. 

ஆனால் கொரோனா பாதிப்பு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இளநீர் விற்பனையும் குறைந்தது. தற்போது வட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் போக்குவரத்து இயக்கம் சீராகி உள்ளது.

அங்கு இளநீர் தேவை அதிகரித்து வரும் நிலையில் உடுமலையில் இருந்து லாரிகள் வாயிலாக இளநீர் கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி தோப்புகளில் இருந்து ஒரு இளநீர் ரூ.25 வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. 

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்:

‘வழக்கமாக அக்டோபர் முதல் ஜனவரி வரை இளநீர் வரத்து அதிகமாக இருக்கும். அவ்வகையில் தற்போது  வட மாநிலங்களுக்கு லாரிகள் மற்றும் கன்டெய்னர் லாரிகளில் இளநீர் கொண்டு செல்லப்படுகிறது. தேவை அதிகமாக இருந்தும் வரத்து குறைவால் கூடுதலாக இளநீரை அனுப்ப முடியாத சூழலும் ஏற்படுகிறது என்றனர்.
Tags:    

Similar News