செய்திகள்
கோப்புபடம்

கொரோனா இழப்பீடு குறித்து 6 வாரத்தில் முடிவு செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2021-06-30 11:52 GMT   |   Update On 2021-06-30 11:52 GMT
கொரோனாவால் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் மாநில அரசுகளால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது என்று இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தெரிவித்தது.

புதுடெல்லி:

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் கீழ் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும், கொரோனாவால் பலியானவர்களுக்கு இறப்பு சான்றிதழ்களை வழங்குவதற்கான சீரான கொள்கையை வகுக்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதிகள் அசோக்பூ‌ஷன், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் விசாரித்து வருகிறது.

கொரோனாவால் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் மாநில அரசுகளால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது என்று இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து புதிய வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.


இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் கூறியதை போல கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்க முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட முடியாது. இதுகுறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். குறைந்த பட்ச தொகையை அரசால் நிர்ணயிக்க முடியும்.

பல்வேறு அம்சங்களை மனதில் வைத்துக்கொண்டு கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக புதிய வழிமுறைகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் 6 வார காலத்துக்குள் வகுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்...இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி

இதேபோல கொரோனா இறப்புக்கான இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்கு பொருத்தமான வழிகாட்டுதல்களை அதிகாரிகள் வெளியிட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News