ஆன்மிகம்
மகாபாரதம் எழுதிய விநாயகர்

மகாபாரதம் எழுதிய விநாயகர்

Published On 2020-08-27 05:13 GMT   |   Update On 2020-08-27 05:13 GMT
மகாபாரதம் என்னும் பெருங்காப்பியத்தை படைத்தவர், வியாசர் என்னும் முனிவர். ஆனால் அந்த முனிவர் சொல்லச் சொல்ல, அந்த மகா காவியத்தை எழுதியவர் விநாயகர் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
மகாபாரதம் என்னும் பெருங்காப்பியத்தை படைத்தவர், வியாசர் என்னும் முனிவர். ஆனால் அந்த முனிவர் சொல்லச் சொல்ல, அந்த மகா காவியத்தை எழுதியவர் விநாயகர் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

மகாபாரதத்தை எழுத விரும்பிய வேதவியாசர், அதனை எழுதுவதற்கு தகுதியான நபரைத் தேடினார். அவருக்கு விநாயகர்தான் நினைவுக்கு வந்தார். உடனே விநாயகரிடம் சென்று, “நான் உருவாக்க இருக்கும் மகாபாரத காவியத்தை, தாங்கள் தான் எழுதித் தர வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார்.

அதற்கு விநாயகப்பெருமான், “நீ விரும்பிய வண்ணமே நான் எழுதுகிறேன். ஆனால் நீ நிறுத்தாமல் சொல்லவேண்டும்” என்று நிபந்தனை விதித்தார். வியாசரும் ஒப்புக்கொண்டார். அதன்படியே 8,800 சுலோகங்கள் கொண்ட மகாபாரதம் விநாயகப்பெருமானால் எழுதப்பட்டது. 
Tags:    

Similar News