ஆட்டோமொபைல்
ஓலா எஸ்1

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - இத்தனை விஷயங்கள் இருக்கா?

Published On 2021-08-18 07:09 GMT   |   Update On 2021-08-18 07:09 GMT
ஓலா எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான டெஸ்ட் ரைடுகள் இந்தியாவில் அக்டோபர் மாத வாக்கில் துவங்குகிறது.


இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் களமிறங்கி இருக்கிறது. முதற்கட்டமாக எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என இரு மாடல்களை ஓலா எலெக்ட்ரிக் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

ஓலா எஸ்1 சீரிசில் கச்சிதமான ட்வின்-பாட் ஹெட்லைட், எல்.இ.டி. டி.ஆர்.எல்., எல்.இ.டி. இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன்பின்புறம் மெல்லிய எல்.இ.டி. டெயில் லைட், சார்ஜிங் பாயின்ட், ஸ்ப்லிட் ரக கைப்பிடிகள் உள்ளன. இருக்கையின் கீழ் இரண்டு ஹெல்மெட்களை வைத்துக் கொள்ளும் வகையில் ஓலா எஸ்1 சீரிஸ் வடிவமைக்கப்பட்டுள்ளன.



விலை 

ஓலா எஸ்1 சீரிஸ் பேஸ் மாடல் ஐந்துவித நிறங்களிலும் எஸ்1 ப்ரோ மாடல் பத்து வித நிறங்களிலும் கிடைக்கிறது. ஓலா எஸ்1 விலை ரூ. 99,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். ஓலா எஸ்1 ப்ரோ விலை ரூ. 1,29,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். 



பேட்டரி மற்றும் திறன்

ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல்கள் 8.5 கிலோவாட் திறன், 58 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இவற்றில் முறையே 2.98 கிலோவாட் மற்றும் 3.97 கிலோவாட் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஓலா எஸ்1 மாடல் முழு சார்ஜ் செய்தால் 121 கிலோமீட்டர் ரேன்ஜ், மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் கேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ஓலா எஸ்1 ப்ரோ மாடல் மணிக்கு அதிகபட்சம் 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதோடு, முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் வரை செல்கிறது.



அம்சங்கள்

ஓலா எஸ்1 - நார்மல் மற்றும் ஸ்போர்ட் என இருவித ரைடிங் மோட்களும், எஸ்1 ப்ரோ - நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் என மூன்று ரைடிங் மோட்களும் கொண்டிருக்கின்றன. இரு வேரியண்ட்களிலும் பிராக்சிமிட்டி லாக்/அன்லாக், ரிமோட் பூட் லாக், கால் அலெர்ட், மெசேஜ் அலெர்ட், இன்போடெயின்மென்ட், சைடு ஸ்டான்ட் அலெர்ட் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் உள்ளன.

இத்துடன் ரிவர்ஸ் மோட் வசதி வழங்கப்படுகிறது. இதை செயல்படுத்தினால் ஸ்கூட்டர் பின்புறமாக செல்லும். மேலும் கெட் ஹோம் மோட், பைண்ட் மை ஸ்கூட்டர், எலெக்டிரானிக் ஸ்டீரிங் லாக், ஹெச்.எம்.ஐ. பிரைட்னஸ் அட்ஜஸ்டர், வெல்கம் ஸ்கிரீன், ஓ.டி.ஏ. அப்டேட்கள், மேனுவல் எஸ்.ஓ.எஸ். உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஓலா எஸ்1 ப்ரோ மாடலில் ஹில்-ஹோல்டு சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. 



டெஸ்ட் ரைடு செய்வது எப்படி?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செப்டம்பர் 8 ஆம் தேதி துவங்குகிறது. இவற்றுக்கான வினியோகம் மற்றும் டெஸ்ட் ரைடுகள் அக்டோபர் மாத வாக்கில் துவங்குகின்றன. புதிய எஸ்1 சீரிசை டெஸ்ட் ரைடு செய்ய விரும்புவோர் ஓலா எலெக்ட்ரிக் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். 

முன்பதிவு செய்ததும், ஸ்கூட்டர் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்பட்டு விடும். இதுதவிர வரும் மாதங்களில் ஓலா எக்ஸ்பீரியன்ஸ் மையங்களை திறக்கவும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

Tags:    

Similar News