செய்திகள்
ஸ்டீவ் ஈஸ்டர்புரூக்

பெண் ஊழியருடன் தொடர்பு - தலைமை நிர்வாக அதிகாரியின் பதவி பறிப்பு

Published On 2019-11-05 00:46 GMT   |   Update On 2019-11-05 00:46 GMT
விதிமுறையை மீறி பெண் ஊழியர் ஒருவருடன் இணக்கமான தொடர்பில் இருந்ததால் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற துரித உணவு நிறுவனம் ‘மெக்டொனால்ட்’. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வந்தவர் ஸ்டீவ் ஈஸ்டர்புரூக். இவர் அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.

அந்த நிறுவனத்தை பொறுத்தவரையில் உயர் பதவி வகிப்பவர்கள், நிறுவனத்தின் ஊழியருடன் காதல், சேர்ந்து வசிப்பது, திருமணம் செய்வது போன்ற எந்த தொடர்பும் வைத்திருக்கக் கூடாது என்பது விதிமுறையாக உள்ளது.

ஆனால் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்டீவ் ஈஸ்டர்புரூக், இந்த விதிமுறையை மீறி பெண் ஊழியர் ஒருவருடன் இணக்கமான தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஸ்டீவ் ஈஸ்டர்புரூக் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, அவர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி என்பவர் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். 
Tags:    

Similar News