தொழில்நுட்பச் செய்திகள்
வாட்ஸ்அப்

இந்திய பயனர்களுக்கு மட்டும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள புதிய சேவை

Published On 2022-02-24 07:27 GMT   |   Update On 2022-02-24 07:27 GMT
இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவே இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் செயலி இந்தியாவில் குறுஞ்செய்தி அனுப்பும் செயலிகளில் முன்னணி செயலியாக இருக்கிறது.

இந்த செயலியில் குறுஞ்செய்திகள் மட்டும் இன்றி ஆடியோ, வீடியோ, வாய்ஸ் கால், வீடியோ கால் உள்ளிட்ட பல அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் பாதுகாப்புக்காக வாட்ஸ் ஆப் நிறுவனம் “சேஃப்டி இன் இந்தியா” என்ற தகவல் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

சேஃப்டி இன் இந்தியா தளத்திற்கு சென்று பயனர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துவது குறித்த அனைத்து தகவல்களையும் பெற முடியும்.

2 ஸ்டெப் வெரிஃபிகேஷன், ஃபார்வெர்ட் லிமிட்ஸ், பிளாக், ரிப்போர்ட், டிஸ்ஸப்பியரிங் மெசேஜ் உள்ளிட்ட அம்சங்கள் குறித்த சந்தேகங்களை பயனர்கள் தீர்த்துகொள்ள முடியும். 



வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களை உண்மை தானா என உறுதி செய்யவும் இந்த தளம் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாட்ஸ்அப் மூலம் யாரும் தொந்தரவு செய்தால் புகார் அளிக்கும் வகையிலும் இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவே இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News