செய்திகள்
ரெயில்களில் சினிமா பார்க்கும் வசதி

2022-ம் ஆண்டு முதல் ரெயில்களில் சினிமா பார்க்கும் வசதி

Published On 2020-01-16 02:14 GMT   |   Update On 2020-01-16 02:14 GMT
ரெயில் பயணிகளை மேலும் கவர்ந்திழுக்கிற வகையில், 2022-ம் ஆண்டு முதல் ரெயில்களில் சினிமா ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் வை-பை என்னும் கம்பியில்லா இணையதள வசதி கொண்ட ரெயில் நிலையங்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.
புதுடெல்லி :

ரெயில் பயணம் அனைவராலும் விரும்பப்படுகிறது. இந்த நிலையில், ரெயில் பயணிகளை மேலும் கவர்ந்திழுக்கிற வகையில், ரெயில்களில் சினிமா ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த சேவையை வழங்குவதற்காக மார்கோ நெட்வொர்க், டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் சர்வீஸ் பிராவைடர் நிறுவனங்களை ரெயில்வே துறையின் ரெயில்டெல் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. பிரிமியம், எக்ஸ்பிரஸ், மெயில் ரெயில்கள் மட்டுமல்லாது புறநகர் ரெயில்களிலும் 2022-ம் ஆண்டு முதல் சினிமா, பாடல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள், பல்வேறு விதமான டி.வி. நிகழ்ச்சிகள், கல்வி நிகழ்ச்சிகள் இலவசமாகவும், கட்டணம் பெற்றுக்கொண்டும் காட்டப்படும்.

இந்த வசதி மொத்தம் 8,731 ரெயில்களில் கிடைக்கும்.

மேலும் வை-பை என்னும் கம்பியில்லா இணையதள வசதி கொண்ட ரெயில் நிலையங்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.
Tags:    

Similar News