லைஃப்ஸ்டைல்
பீட்ரூட் மிளகு சாப்ஸ்

உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பீட்ரூட் மிளகு சாப்ஸ்

Published On 2021-02-27 05:27 GMT   |   Update On 2021-02-27 05:27 GMT
நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும். செரிமானப் பிரச்சனை நீங்கும். பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள் :

பீட்ரூட் - 4
மிளகு - 1 டீஸ்பூன்
இஞ்சி - 2 துண்டு
பூண்டு - 6 பல்
லவங்க பட்டை - 2
தனியா தூள் - 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

பீட்ரூட், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, பூண்டு, இஞ்சி, லவங்க பட்டை, தனியா தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

பின்னர் வதக்கிய பொருட்களை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது உப்பு கலந்து பீட்ரூட்டை வேகவைத்துக்கொள்ளவும்.

நன்கு வெந்ததும் அதில் அரைத்த மசாலா கலவையை கொட்டி, மசாலா வாசம் நீங்கி கெட்டி பதத்துக்கு வந்ததும் இறக்கி பரிமாறலாம்.

சூப்பரான பீட்ரூட் மிளகு சாப்ஸ் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News