உள்ளூர் செய்திகள்
.

ஊராட்சி செயலாளரை தாக்கிய பஞ்சாயத்து தலைவர்

Published On 2022-05-07 09:56 GMT   |   Update On 2022-05-07 09:56 GMT
தேன்கனிக்கோட்டை அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய பஞ்சாயத்து தலைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சிக்கு உட்பட்ட கக்கதாசம் பஞ்சாயத்தில் தலைவராக முனி ரெட்டி இருந்து வருகிறார். இதில் ஊராட்சி செயலாளராக வஜ்ரவேல் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் தலைவர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சரிவர வருவதில்லை என கூறப்படுகிறது. 

மேலும் இந்த ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் ஆன தண்ணீர் வசதி, சாக்கடை தூர்வாருதல், தெரு விளக்குகள் அமைத்தல், குறித்து புகார்  தெரிவிக்க வரும் கிராம மக்களுக்கு தருந்த பதில் அளிக்காமல் தலைவர் திருப்பி அனுப்பப் விடுவதாக கூறப்படுகிறது.

இதனால் கிராம பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை ஊராட்சி செயலாளர் வஜ்ரவேல்யிடம் தெரிவித்துள்ளனர்.

 இதுகுறித்து வச்சிரவேல் தலைவர் முனி ரெட்டியிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் ஊராட்சி பணிகள் சரிவர நடைபெறவில்லை என கூற ப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டையில் இருந்து தளி நோக்கி ஊராட்சி செயலாளர் வஜ்ரவேல் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது கக்கதாசம் பஸ் நிறுத்ததில் பஸ் நின்றபோது பஸ்சில் ஏறிய முனி ரெட்டி பொதுமக்கள் முன்னிலையில் எதிர்பாரத விதமாக கைகளை வஜ்ரவேலுவை தாக்கியுள்ளார்.

இதில் முகத்தில் அடிபட்டு  மூக்கில் ரத்தம் வந்துள்ளது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இதுகுறித்து வஜ்ரவேல் தளி போலீசில் புகார் தெரிவித்தார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் முன்னிலையில் பஸ்சில் ஊராட்சி செயலாளரை பஞ்சாயத்து தலைவர் தாக்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News