செய்திகள்
98 ரன்கள் அடித்த ஹரி நிஷாந்த்

சையத் முஷ்டாக் அலி டிராபி: முதல் ஆட்டத்தில் 66 ரன் வித்தியாசத்தில் ஜார்க்கண்ட்-ஐ வீழ்த்திய தமிழ்நாடு

Published On 2021-01-10 10:51 GMT   |   Update On 2021-01-10 10:51 GMT
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் போட்டியல் ஜார்க்கண்ட் அணியை 66 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய தமிழ்நாடு.
கொரோனா பொது ஊரடங்கிற்குப் பிறகு இந்தியாவில் முதன்முறையாக இன்று கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின. சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - ஜார்க்கண்ட் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது, தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் ஆட்டமிழக்காமல் 64 பந்தில் 92 ரன்கள் விளாசினார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 17 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 46 ரன்கள் விளாசினார்.

பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜார்க்கண்ட் களம் இறங்கியது. ஜார்க்கண்ட் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகள இழக்க 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களே அடித்தது. இதனால் தமிழ்நாடு அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சோனு யாதவ் 3 விக்கெட்டும், சந்தீப் வாரியார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News