செய்திகள்
விராட் கோலி, கபில்தேவ்

கவாஸ்கர் அவரது மகனை பல மாதங்களாக பார்க்கவில்லை: கபில்தேவ்

Published On 2020-11-22 10:48 GMT   |   Update On 2020-11-22 10:49 GMT
சுனில் கவாஸ்கர் அவரது மகனை பல மாதங்கள் பார்க்காமல் இருந்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. பேறுகால விடுப்பு கேட்டதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்னர் இந்தியா திரும்புகிறார்.

விராட் கோலியின் முடிவுக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கபில்தேவ் விராட் கோலி முடிவு குறித்து கூறுகையில் ‘‘செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் நாம் வாய்ப்பு வழங்க வேண்டும் என நினைக்க வேண்டாம். இது உறுதி.

சுனில் கவாஸ்கர் பல மாதங்கள் அவரது மகனை பார்க்கவில்லை. இது வித்தியாசமான விஷயம். பார்வை, யோசனைகள் மாறுபட்டவை. நான் விராட் கோலியை பற்றி பேசும்போது, அவரது தந்தை காலமானபோது, அடுத்த நாள் கிரிக்கெட் விளையாட வந்தார். தற்போது அவர் தனது குழந்தைக்காக ஓய்வு கேட்டுள்ளார். இது சிறப்பானது. அதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

நீங்கள் விமானத்தை வாடகைக்கு பிடித்து வந்துவிட்டு மூன்று நாட்களில் செல்ல முடியும். தற்போது விளையாட்டு வீரர்கள் இதை செய்யமுடியும் என்பதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. நான் விராட் கோலிக்காக மகிழ்ச்சி அடைகிறேன். அவரது குடும்பத்தை பார்ப்பதற்காக திரும்பி வருகிறார். உங்களுடைய பேரார்வத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், மிகப்பெரிய பேரார்வம் அவருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது என்பதுதான்’’ என்றார்.
Tags:    

Similar News