செய்திகள்
வவ்வாலுக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்த காட்சி.

காயமடைந்த வவ்வாலுக்கு சிகிச்சை அளித்த கால்நடை டாக்டர்கள்

Published On 2021-09-18 09:38 GMT   |   Update On 2021-09-18 09:38 GMT
காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வவ்வாலுக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மிகப் பெரிய பழம் தின்னி வவ்வால் ஒன்று மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது. இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அந்த வவ்வாலை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் உரிய முறையில் கவனமுடன் சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் வவ்வால் புத்துணர்ச்சி பெற்று இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் தீயணைப்பு துறையினர் மகிழ்ச்சியடைந்தனர்.

இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தாயை பிரிந்து தத்தளித்துக் கொண்டு இருந்த மர நாய்க்கு கால்நடை டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றினர். தீயணைப்பு துறையினரின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.



Tags:    

Similar News