உள்ளூர் செய்திகள்
எல்.வேலாயுதத்துக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்

செங்கல்பட்டு மைய அகில இந்திய கட்டுனர் சங்க தலைவராக டாக்டர் வேலாயுதம் பதவி ஏற்பு

Published On 2022-05-07 11:21 GMT   |   Update On 2022-05-07 11:21 GMT
அகில இந்திய கட்டுனர் சங்கம் செங்கை மையத்தின் 2022-2023ம் ஆண்டுக்கான தலைவராக டாக்டர் எல்.வேலாயுதம் பதவி ஏற்றார்.


அகில இந்திய கட்டுனர் சங்கம் செங்கை மையத்தின் 2022-2023ம் ஆண்டுக்கான தலைவராக டாக்டர் எல்.வேலாயுதம் பதவி ஏற்றார்.

பதவி ஏற்பு விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஊரக துறை மற்றும் சிறு குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் டாக்டர் ஜெகத்ரட்சன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

முன்னாள் தேசிய தலைவர் பீஸ்மா ராதா கிருஷ்ணன், ஆடிட்டர் ராஜசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில தலைவர் கே.ஜெகநாதன், தேசிய துணைத் தலைவர் வேதானந்தம் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு மு.மோகன், எம்.திருசங்கு, உடனடி மாநில தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவுக்கு வந்த அனைவரையும் வெங்கடேசன் வரவேற்றார்.

முன்னதாக தலைவர் பதவி ஏற்ற டாக்டர் எல்.வேலாயுதம் தனது ஏற்புைரயில், “சங்கத்தின் கோரிக்கையினை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நிச்சயம் முயற்சி செய்வேன். சங்க உறுப்பினர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு கூப்பிட்ட நேரத்தில் கூப்பிட்ட இடத்தில் சென்று தீர்வு காண துணை நிற்பேன். தலைவர் என்பது ஒரு பொறுப்புதான். உங்களில் ஒருவனாக உங்களின் பிரதிநிதியாக அரசுக்கும் கட்டுனர்களுக்கும் ஒரு நல்ல உறவை ஏற்படுத்த அயராது பாடுபடுவேன்” என்றார்.

விழாவில் செங்கை மையத்தின் துணைத் தலைவர் வி.ரங்கநாதன், செயலாளர் விவேக் ராமகிருஷ்ணன், இணை செயலாளர் பி.ராமசாமி, பொருளாளர் இ.கெஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் டி.சந்திரபாபு, ஆர்.கிருஷ்ண மூர்த்தி, கே.கே.ராகவன், பி.சீனுவாசன், முன்னாள் கட்டுனர் சங்க நிர்வாகிகளும், செங்கல்பட்டு வியாபார சங்க உறுப்பினர்கள், வெற்றி ரியல்ஸ் குடும்பங்கள் மற்றும் கன்சக்சன்ஸ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் அறு சுவை உணவு வழங்கப்பட்டது. பின்னணி பாடகர் வேல்முருகன் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

Tags:    

Similar News