செய்திகள்
ரெயில்வே துறை மந்திரி பியூஷ்கோயல்

பிளாட்பாரம் டிக்கெட்டுகள் மூலம் ரூ.139 கோடி வருமானம் - பாராளுமன்றத்தில் ரெயில்வே மந்திரி தகவல்

Published On 2019-11-27 22:17 GMT   |   Update On 2019-11-27 22:17 GMT
நாடு முழுவதும் பிளாட்பாரம் டிக்கெட்டுகள் மூலம் ரூ.139 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக ரெயில்வே துறை மந்திரி பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களையில் நேற்று ரெயில்வே துறை மந்திரி பியூஷ்கோயல் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘நாடு முழுவதும் 2018-19-ம் நிதி ஆண்டில் பிளாட்பாரம் டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ.139.20 கோடியும், இந்த நிதி ஆண்டில் கடந்த செப்டம்பர் வரையிலான காலாண்டில் ரூ.78.50 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது.

அதேபோல், 2018-19-ம் நிதி ஆண்டில் விளம்பரங்கள் மற்றும் கடைகள் வாயிலாக ரூ.230.47 கோடியும், இந்த நிதி ஆண்டில் கடந்த செப்டம்பர் வரையிலான காலாண்டில் ரூ.128.40 கோடியும் ரெயில்வே நிர்வாகம் வருமானம் ஈட்டி உள்ளது’ என்றார்.
Tags:    

Similar News