ஆன்மிகம்
ஸ்ரீபுரம்

ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் நவராத்திரி விழா 29-ந்தேதி தொடங்குகிறது

Published On 2019-09-26 03:38 GMT   |   Update On 2019-09-26 03:38 GMT
ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் வருகிற 29-ந் தேதி நவராத்திரி விழா தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் தங்கக்கோவில் மற்றும் நாராயணி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வருகிற 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நவராத்திரி விழா தொடங்குகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் 8-ந் தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது.

அப்போது நாராயணி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை மற்றும் யாகங்கள் நடக்கிறது. அம்மனுக்கு வித்யாலட்சுமி, மாதங்கி, ராஜேஸ்வரி, காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, கருமாரி, காயத்திரி, காளி ஆகிய அலங்காரம் செய்யப்படுகிறது. அடுத்தமாதம் 7-ந் தேதி சரஸ்வதி பூஜையும், 8-ந் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது.

லட்சுமிநாராயணி கோவில் வளாகத்தில் தினமும் மகாலட்சுமி மகாயாகம் நடைபெறுகிறது. தினமும் மாலை 6 மணி முதல் 7.30 மணிவரை இசை நிகழ்ச்சி, வாய்ப்பாட்டு, கோலாட்டம், பரதநாட்டியம் ஆகிய கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. மேலும் நாராயணி கோவிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று நாராயணி கோவிலில் தினமும் திரிசக்தி யாகமும், இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை இசை நிகழ்ச்சிகள், கோலாட்டம், குச்சிப்புடி நடனம், கதக் நடனம், பரதநாட்டியம், சாக்ஸபோன் இசை போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
Tags:    

Similar News