செய்திகள்
கொரோனா வைரஸ்

நாமக்கல் நகராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரம்

Published On 2021-06-06 12:27 GMT   |   Update On 2021-06-06 12:27 GMT
மோகனூரில் அனைத்து சாலைகளிலும், அரசு ஆஸ்பத்திரி முகப்பிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று வீதி, வீதியாக கிருமி நாசினி தெளித்தனர்.
நாமக்கல்:

நாமக்கல் நகராட்சியில் இதுவரை சுமார் 3 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது தினமும் சராசரியாக 25-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கொரோனா பரவலை தடுக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஆர்.பி.புதூர், என்.ஜி.ஓ.காலனி உள்ளிட்ட 13 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் வசிப்போருக்கு தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர காய்ச்சல் பரிசோதனை முகாமும் ஒவ்வொரு பகுதியாக நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. மோகனூரில் அனைத்து சாலைகளிலும், அரசு ஆஸ்பத்திரி முகப்பிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று வீதி, வீதியாக கிருமி நாசினி தெளித்தனர்.
Tags:    

Similar News