செய்திகள்
கோப்பு படம்

ராமநாதபுரம் வாலிபருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

Published On 2019-10-10 13:44 GMT   |   Update On 2019-10-10 13:44 GMT
ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடத்து வருகிறது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே தெற்கு பெருவயல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கோபிநாத் (வயது25). இவர் சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் சொந்த ஊரான பெருவயலுக்கு திரும்பினார்.

அங்கிருந்து ராமநாதபுரம் பகவதியம்மன் கோவில் தெருவில் உள்ள சித்தி வீட்டிற்கு வந்தார், தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொற்று நோய் பரவாமல் இருக்க சுகாதாரத்துறையினர் தெற்கு பெருவயல், பகவதியம்மன் கோவில் தெருப்பகுதியில் புகை மருந்து அடித்து கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுருபரன் கூறுகையில், பருவ மாற்றத்தின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மக்கள் அச்சமடைய தேவையில்லை.

அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றார்.
Tags:    

Similar News