உள்ளூர் செய்திகள்
நிவாரண தொகையை அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார் வழங்கினார்.

கொரோனா நிவாரண நிதியை வீட்டிற்கே சென்று வழங்கிய அமைச்சர்

Published On 2022-01-10 09:01 GMT   |   Update On 2022-01-10 09:01 GMT
கொரோனா நிவாரண நிதியை அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார் வீடுகளுக்கே சென்று வழங்கினார்.
புதுச்சேரி:

கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு வீட்டிற்கு சென்று அரசின் நிவாரண தொகையை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் வழங்கினார். கொரோனாவால் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் அரசின் நிவாரண தொகையாக வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். 

கடந்த ஆண்டிலிருந்து கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரணத் தொகையாக ரூ. 50ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் ஊசுடு தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் அவர்களது வீடுகளுக்கு சென்று ரூ.50 ஆயிரத்திற்கான நிவாரணத் தொகையை வழங்கினார். 
பாதிக்கப்பட்டவர்களில் வீட்டுக்கே சென்று நிவார ணத் தொகையை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் நிவாரணம் வழங்கி வருகிறார்.
Tags:    

Similar News