செய்திகள்
எடியூரப்பா

அமித்ஷா சுற்றுப்பயணம் முடிந்த பிறகே புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு: எடியூரப்பா

Published On 2021-01-16 02:03 GMT   |   Update On 2021-01-16 02:03 GMT
உள்துறை மந்திரி அமித்ஷா சுற்றுப்பயணம் முடிவடைந்த பிறகே புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக மந்திரிசபை கடந்த 13-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் புதிதாக 7 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு இன்னும் இலாகா ஒதுக்கீடு செய்யப்படடவில்லை. இந்த நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷாவின் சுற்றுப்பணம் முடிவடைந்த பிறகே புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியாவது:-

தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகள் கர்நாடகத்தில் அதிகமாக நடக்கின்றன. நிதின் கட்காரி அந்த துறை மந்திரியாக நியமிக்கப்பட்ட பிறகு கடந்த 30 ஆண்டுகளில் நடைபெறாத திட்டங்கள் தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக அவருக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன். தேசிய நெடுஞ்சாலை தொடர்பாக பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளோம். அதற்கு அனுமதி அளிப்பதாக அவர் உறுதியளித்து உள்ளார்.

உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை (அதாவது இன்று) கர்நாடகம் வருகிறார். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் நானும் பங்கேற்க உள்ளேன்.

அவரது சுற்றுப்பணம் முடிவடைந்த பிறகே புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Tags:    

Similar News