செய்திகள்

ரபாடா இடத்தை டிரென்ட் போல்ட் மூலமாக நிரப்புவோம்: ரிக்கி பாண்டிங்

Published On 2019-05-05 09:53 GMT   |   Update On 2019-05-05 09:53 GMT
ஐபிஎல் தொடரில் இருந்து ரபாடா விலகிய நிலையில், அவரது இடத்தை டிரென்ட் போல்ட் மூலமாக நிரப்புவோம் என டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளர் பாண்டிங் தெரிவித்துள்ளார். #IPL2019 #DC
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக தென்ஆப்பிரிக்காவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான ரபாடா விளையாடி வந்தார். அவர் 12 போட்டிகளில் 25 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

சென்னைக்கு எதிரான 13-வது போட்டியில் அவர் களம் இறங்கவில்லை. பின்னர், முதுகு வலி காரணமாக அவர் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இந்நிலையில் ரபாடா இழப்பை டிரென்ட் போல்ட் மூலம் நிரப்புவோம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையல் ‘‘நாங்கள் டிரென்ட் போல்ட் போன்ற உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துள்ளோம். கடந்த சீசனில் போல்ட் டெல்லி அணிக்காக மிகவும் சிறப்பாக பந்து வீசினார். ரபாடா இழப்பை அவரை கொண்டு நிரப்ப முடிவும் என்று நாங்கள் நினைக்கிறோம்’’ என்றார்.
Tags:    

Similar News