செய்திகள்
அதிகாலை சூரியன் உதயமான ரம்யமான காட்சியும், அதை காண திரண்ட சுற்றுலா பயணிகளையும் படத்தில் காணலாம்.

கன்னியாகுமரி கடற்கரையில் இன்று சூரிய உதயம் காண அதிகாலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2021-07-29 09:03 GMT   |   Update On 2021-07-29 09:03 GMT
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களிலும் பண்டிகை காலங்களிலும்சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு அதிகளவில் படை எடுத்து வந்த வண்ணமாக உள்ளனர்.

கன்னியாகுமரி:

கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்கள் இன்னும் திறக்கப்படாததாலும் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படாததாலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. இருப்பினும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களிலும் பண்டிகை காலங்களிலும்சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு அதிகளவில் படை எடுத்து வந்த வண்ணமாக உள்ளனர்.

இந்தநிலையில் இன்று சூரிய உதயம் காண்பதற்காக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். சுற்றுலா பயணிகள் சூரியன் உதித்து வரும் இயற்கை காட்சியை தங்கள் மொபைல் போன்களில் படம் பிடித்தனர்.

ஆர்வம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடற்கரை அருகே அமைந்துள்ள ஆபத்தான பாறைகளின் மீது ஏறி நின்று படம் பிடித்தனர்.

Tags:    

Similar News