உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிய திட்டங்கள் தொடர்பாக அனைத்துத்துறை செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Published On 2022-01-11 07:48 GMT   |   Update On 2022-01-11 10:35 GMT
மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் விரைவில் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும், அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கண்காணித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:

தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும், புதிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாகவும், தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைப்பெற்ற இந்த ஆலோசனையில் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

குறிப்பாக, காவலர்களுக்கு நல ஆணையம், ஆதிதிராவிடர் நல ஆணையம், மறைந்த தலைவர்களுக்கு மணிமண்டபங்கள், அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள், நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பல்வேறு திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் விரைவில் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும், அதனை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் கண்காணித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில், முதல்-அமைச்சர் நேரில் கண்காணிக்க ஏதுவாக முதல்-அமைச்சரின் மிண்ணனு முகப்பு பலகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று நடைப்பெற்ற ஆலோசனையில், துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களுக்கு எத்தனை திட்டங்கள் செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது, முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும், ஒவ்வொரு திட்டங்களுக்கும் முன்னுரிமை அளித்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அனைத்துத்துறை செயலாளர்களும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News